மத்திய நீர்வள ஆணைய குழு ஆய்வு
தமிழக பகுதியில் உள்ள காவிரிநீர் அளவிடும் இடத்தை மாற்றுவது குறித்து மத்திய நீர்வள ஆணைய குழு காரைக்காலில் ஆய்வு செய்தது.
காரைக்கால்
தமிழக பகுதியில் உள்ள காவிரிநீர் அளவிடும் இடத்தை மாற்றுவது குறித்து மத்திய நீர்வள ஆணைய குழு காரைக்காலில் ஆய்வு செய்தது.
காவிரி நீர் பகிர்வு
காரைக்கால் கடைமடை பகுதிக்கான காவிரி பாசன நீர் தமிழகம் வழியாக காரைக்காலை வந்தடைகிறது. ஆனால் நீர் பகிர்வை அளவீடு செய்யும் இடம் தமிழக பகுதியான நாகை மாவட்டத்தில் உள்ளது.
இதனால் காரைக்காலுக்குரிய தண்ணீர் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் தமிழக பகுதியில் உள்ள நீர் அளவீடு இடத்தை புதுவை அதிகாரிகள் நேரடியாக சென்று அளவிடுவதில் சிரமம் இருப்பதாக காவிரி நதிநீர் கூட்டத்தில் புதுவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
இந்தநிலையில் இன்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய நீர்வள ஆணையத்தின் காவிரி நதி நீர் ஆணைய கண்காணிப்பு பொறியாளர் நாகமோகன் தலைமையில் அதிகாரிகள் குழு காரைக்கால் வந்தது.
இந்த குழுவினர் நாகை, திருவாரூர் மற்றும் காரைக்கால் எல்லைகளில் உள்ள திருமலைராஜன் ஆற்றின் ஓரமாக மேல போலகம் பகுதியிலும், வாஞ்சியாறு கரையோரம் கண்ணாப்பூர் பகுதியிலும், ஆய்வு மேற்கொண்டனர். இதில் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், பேரளம் பகுதியில் அமைந்துள்ள நீர் அளவிடும் இடத்தை காரைக்கால் அடுத்த கண்ணாபூருக்கும் மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது புதுச்சேரி தலைமை பொறியாளர் பழனியப்பன், தமிழக நீர்வள துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், காரைக்கால் மாவட்ட செயற்பொறியாளர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.