போலீசாரின் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு
அரசு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த போலீசாரின் குழந்தைகளுக்கு டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் ரொக்கப்பரிசு வழங்கினார்.
புதுச்சேரி
புதுவையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த ஐ.ஆர்.பி.என். போலீசாரின் குழந்தைகளுக்கு காவல்துறை தலைமையகத்தில் இன்று ரொக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களை பாராட்டி போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் ரொக்கப்பரிசு வழங்கினார்.
10-ம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பிடித்த ஆதவனுக்கு ரூ.3 ஆயிரம், 2-வது இடம் பிடித்த வித்யாவுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. சி.பி.எஸ்.இ. தேர்வில் முதலிடம் பிடித்த ஜித்தேந்தருக்கு ரூ.3 ஆயிரம், 2-வது இடம் பிடித்த வசந்துக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. 12-ம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பிடித்த மஞ்சுளாவுக்கு ரூ.3 ஆயிரம், 2-வது இடம் பிடித்த ரவிணாவுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, ஐ.ஆர்.பி.என். துணை கமாண்டன்ட் சுபாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.