என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு


என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு
x

புதுவையில் முதல்-அமைச்சரின் பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோட்டுச்சேரி

முதல்-அமைச்சரின் பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பேனர் வைப்பதில் தகராறு

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சந்திர பிரியங்கா மற்றும் எம்.எல்.ஏ. திருமுருகன் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர் வைத்து வருகின்றனர். அமைச்சரின் ஆதரவாளர் அய்யப்பன் (வயது 42) மற்றும் சிலர் பேனர் வைத்தனர்.

அப்போது அங்கு வந்த திருமுருகன் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ராஜ்குமார், மற்றும் ஆதரவாளர்கள், அங்கு பேனர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் மற்றும் ஆதரவாளர்கள் அய்யப்பனை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கி, பேனரை கிழித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

6 பேர் மீது வழக்குப்பதிவு

இது குறித்து அமைச்சர் அலுவலக கூடுதல் தனி அலுவலர் லட்சுமணபதி கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் ராஜ்குமார், பாலாஜி, கணபதி, சிவராமன், வேலுப்பாண்டியன், சுகுமாறன் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story