அதிக மாணவர்களை ஏற்றிச் சென்றஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்


அதிக மாணவர்களை ஏற்றிச் சென்றஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
x

அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

புதுச்சேரி

அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

வாகன சோதனை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவை புஸ்சி வீதியில் குளூனி பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ தனியார் பஸ் மீது மோதியதில் 3 மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்று மீண்டனர். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களில் அடிக்கடி சோதனை நடத்தி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று உப்பளம் சாலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அபராதம்

அப்போது பல ஆட்டோக்களில் புத்தகப்பை, உணவு பைகளை வெளியே தொங்கவிட்டு செல்லும் ஆட்டோக்களை மடக்கி எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அதிக அளவில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற 3 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.

போக்குவரத்து போலீசாரின் இந்த சோதனையால் உப்பளம் சாலையில் பரபரப்பான நிலை காணப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் அவ்வப்போது தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story