பீர் வாங்கி கொடுத்துமோட்டார் சைக்கிள், செல்போன் பறிப்பு
புதுவையில் பீர் வாங்கி கொடுத்து மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனூர்
பீர் வாங்கி கொடுத்து மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பீர் வாங்கி கொடுத்து...
திருக்கனூர் அடுத்த சோரப்பட்டு டி.வி.சென்டர் வீதியை சேர்ந்தவர் ரகுமான் (வயது 58). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர், தனது மோட்டார் சைக்கிளுடன் சோரப்பட்டு சாராயக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ரகுமானிடம் பேச்சு கொடுத்து தான் பீர் வாங்கி தருவதாகவும், தன்னை வழுதாவூர் கொண்டு சென்று விடும்படி கேட்டுள்ளார். அதன்படி அந்த நபர் வாங்கி கொடுத்த பீரை குடித்து விட்டு அவரை அழைத்து கொண்டு வழுதாவூர் நோக்கி சென்றார்.
செல்லிப்பட்டு சாராயக்கடை எதிரே சென்றபோது, அந்த வாலிபர் திடீரென ரகுமானை கீழே தள்ளிவிட்டு செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு தப்பி சென்றார்.
கைது
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரகுமானிடம் மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்து சென்றது விழுப்புரம் மாவட்டம் கொடுத்தாம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரத்குமார் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் அவர் பலரிடம் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து விலையுயர்ந்த 6 செல்போன்கன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.