ரூ.21 லட்சத்தில் வணிக வளாகம் கட்ட பூமிபூஜை


ரூ.21 லட்சத்தில் வணிக வளாகம் கட்ட பூமிபூஜை
x

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் ரூ.21 லட்சம் செலவில் வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தொகுதிக்கு உட்பட்ட கோட்டுச்சேரி சிங்காரவேலு பிள்ளை மண்டபம் அருகில், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.21 லட்சம் செலவில் வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சிவனேசன், மகளிர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story