பாரதிதாசன் கல்லூரி மாணவிகள் போராட்டம்


பாரதிதாசன் கல்லூரி மாணவிகள் போராட்டம்
x

புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிதாசன் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிதாசன் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வகுப்புகளை புறக்கணித்து...

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறி புதுவையில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்த நிலையே தொடரவேண்டும் என்று வலியுறுத்தி இன்று முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

அப்போது மாணவிகள், தங்களுக்கு புதிய கல்விக்கொள்கை வேண்டாம் என்று கோஷங்கள் எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்த முத்தியால்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தவளக்குப்பம் ராஜீவ்காந்தி அரசு கல்லூரி மாணவர்களும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story