கண்டக்டர் மீது தாக்குதல்


கண்டக்டர் மீது தாக்குதல்
x

தனியார் பஸ்சை வழிமறித்து கண்டக்டரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வில்லியனூர்

வில்லியனூர் ஜி.என்.பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் மதன்ராஜ் (29). இவர் தனியார் பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று புதுச்சேரி பழைய பஸ் நிலையத்தில் இருந்து மதகடிப்பட்டு செல்லும் வழித்தடத்தில் பணியில் இருந்தார். அந்த பஸ் அரியூர் ஆனந்தபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பஸ்சை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மதன்ராஜிடம் தகராறு செய்து கருங்கல், இரும்பு கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மதன்ராஜ் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் மதன்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். டைமின் பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story