ராஜஸ்தானை சேர்ந்தவர் கைது


ராஜஸ்தானை சேர்ந்தவர் கைது
x

புதுவை மருத்துவ கருவிகள் வாங்கி விற்பனை தொழில் நபரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ கருவிகள் வாங்கி மோசடி செய்த ராஜஸ்தானை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி ரெயின்போ நகரை மணிகண்டன் (வயது49). மருத்துவ கருவிகள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் மணிகண்டனை ராஜஸ்தானை சேர்ந்த மோகன்லால் (49), மேலாளர் சுனில்குமார் (23) ஆகியோர் கடந்த ஆண்டு சந்தித்தனர். அப்போது அவர்கள் தாங்கள் வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்துவதாகவும், அதற்கு பரிசோதனைகள் மேற்கொள்ள ஆய்வு செய்ய மருத்துவ கருவிகள் தேவைப்படுகிறது என தெரிவித்தனர்.

அதனை நம்பிய மணிகண்டன், கடந்த டிசம்பர் மாதம் ரூ.10 லட்சம் மதிப்பிலான 4 மருத்துவ கருவிகள் வழங்கி உள்ளார். ஆனால் மோகன்லாஸ், சுனில்குமார் ஆகியோர் கருவிகள் வாங்கியதற்கான பணத்தை கொடுக்காமல் மோசடி செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். இந்தநிலையில் பெங்களூருவில் பதுங்கி இருந்த மோகன்லாலை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக உள்ள சுனில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story