போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

காரைக்காலில் என்.சி.சி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட என்.சி.சி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. முகாமின் ஒரு பகுதியாக என்.சி.சி. மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை என்.சி.சி. கமாண்டிங் அதிகாரி கர்ணல் ஜோஷி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அறிஞர் அண்ணா அரசு கல்லூரில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையம் அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில் என்.சி.சி. அதிகாரிகள், ராணுவ பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story