தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து சாவு
தனியார் நிறுவன ஊழியர் திடீரென மயங்கி விழுந்து ஊயிரிழந்தார்.
மூலக்குளம்
ரெட்டியார்பாளையம் தோப்பு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருந்து நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அவரது மனைவி கிரிஜா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நிறுவனத்தில் பணியில் இருந்தபோது சுரேஷ் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story