சமையல் கியாஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கீடு


சமையல் கியாஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கீடு
x

புதுவை மாநிலத்தில் சமையல் கியாஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் சமையல் கியாஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

அடையாள அட்டை

புதுவை கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று தனியார் திருமண நிலையத்தில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனடையும் குடும்ப தலைவிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

ரூ.8 கோடி ஒதுக்கீடு

புதுவை அரசு மகளிருக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவித்த அனைத்து திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் உள்ள 70 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.1,000 ஆயிரம் நிதி உதவி பெற தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்தால் உடனடியாக பணம் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

சமையல் கியாஸ் மானியம் வழங்குவதற்கு தேவையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவை கிடைத்தவுடன் பயனாளிகள் வங்கி கணக்கில் மானியம் விரைவில் செலுத்தப்படும். இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் உதவியோடு நமது மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story