வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x

புதுவையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் தாக்கப்படுவதை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

தமிழகத்தில் வக்கீல்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படுவதை கண்டித்தும், வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், தமிழகம் மற்றும் புதுவையில் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று புதுச்சேரி வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக கோர்ட்டு பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. நேற்று நடைபெற இருந்த வழக்குகள் மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.


Next Story