வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x

புதுச்சேரி கோர்ட்டில் உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுவை கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள், கோர்ட்டு ஊழியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இ-பைலிங் முறையை மேலும் 6 மாதம் தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒட்டுமொத்தமாக பணிகளை புறக்கணித்து கோர்ட்டு வளாகத்தில் உள்ள ஓய்வு அறையில் அமர்ந்திருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் 300-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்துகொண்டனர். போராட்டம் காரணமாக இன்று கோர்ட்டில் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.


Next Story