மாநில அந்தஸ்துபெற அ.தி.மு.க. துணை நிற்கும்


மாநில அந்தஸ்துபெற அ.தி.மு.க. துணை நிற்கும்
x

மாநில அந்தஸ்துபெற அ.தி.மு.க. துணை நிற்கும் என அன்பழகன் உறுதியளித்தார்.

புதுச்சேரி

புதுவை கிழக்கு மாநில அ.தி. மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ரங்கசாமி விதவை, முதியோர் பென்ஷன் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவி களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் 21 வயதில் இருந்து 55 வயதுக்குள் ஆண்டு வருமானம் ரூ.75 ஆயிரத்துக்குள் உள்ள சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப பெண்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்தை குறைகூற தி.மு.க.வுக்கும், காங்கிரசுகும் எந்த தகுதியும் இல்லை.

மாநில அந்தஸ்து பெறுதல், நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்த்தல், மத்திய அரசிடமிருந்து நிதி பெறுதல் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி டெல்லி அழைத்துச் சென்று நிதி, மாநில அந்தஸ்துபெற பிரதமரை வலியுறுத்த வேண்டும். மாநில அந்தஸ்து பெறுவதில் அ.தி.மு.க. என்றும் துணை நிற்கும்.

மாநில அந்தஸ்து பற்றி பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் எந்த அருகதையும் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் நீண்டகாலம் கூட்டணி ஆட்சியில் இருந்த தி.மு.க.வும், காங்கிரசும் ஏன் மாநில அந்தஸ்தை வழங்கவில்லை? இதுவரை மாநில அந்தஸ்து கிடைக்காததற்கு இந்த கட்சிகளே காரணம்.

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

பேட்டியின்போது பொருளாளர் ரவி பாண்டுரங்கன், அன்பழகன் உடையார், துணை செயலாளர் நாகமணி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story