காரைக்காலில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை


காரைக்காலில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை
x

காரைக்காலில் அறுவடை செய்யப்படும் நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் காரைக்கால் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

காரைக்கால்

காரைக்காலில் அறுவடை செய்யப்படும் நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் காரைக்கால் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வரலாறு காணாத மழை

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காரைக்காலில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள வந்தார். தொடர்ந்து அங்கு கூடிய விவசாயிகளுக்கு, விதைகள் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் அடங்கிய பையை வழங்கினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அண்மையில் சீர்காழியில் வரலாறு காணாத கன மழை பெய்தது. இந்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழக முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கு நிவாரணத்தை அறிவிப்பார்.

விவசாயிகளுக்கு நிவாரணம்

தமிழக எதிர்க்கட்சிகள், ஆளும் அரசை குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். மழைநீர் முழுமையாக வெளியேறி வருகிறது.

இதனையடுத்து பயிரின் தன்மைகளை பார்த்து விரைவில் விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் எம்.எல்.ஏ. உள்பட பலர் உடன் இருந்தனர்.

தமிழக அரசு கொள்முதல்

தொடர்ந்து காரை பிரதேச விவசாய நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து கொடுத்த மனுவில் காரைக்காலில் வரும் சம்பா அறுவடையின்போது, காரைக்கால் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


Next Story