கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

மேட்டுபாளையம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி

மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், விழுப்புரம் கோட்டக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கவிதாசன் (வயது 25) என்பதும், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story