பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
பங்கூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருபுவனை
சென்னை - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் திருபுவனை பகுதியில் மும்முரமாக நடந்து வருகின்றன. தற்போது பங்கூர் பகுதியில் பணிகள் நடந்து வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கழிவுநீர் வாய்க்கால் அமைக்காமல் அப்புறப்படுத்தப்பட்ட வீடுகளின் அருகில் மீண்டும் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்க கூடாது, குடிநீர் இணைப்புகளை துண்டிப்பது, மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு வயர்களை துண்டிப்பது போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக கூறிபொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story