மாணவர்களுக்கு 'சாப்ட்வேர்' கையேடு
மாணவர்களுக்கு சாப்ட்வேர் கையேட்டை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்.
காரைக்கால்
மாணவர்களுக்கு சாப்ட்வேர் கையேட்டை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்.
மாணவர்களுக்கு கையேடு
மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், புதுச்சேரி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தேசியக் கல்வி வழிகாட்டுதல் சேவை மையம் இணைந்து காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சியை இன்று நடத்தியது.
நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கி மாணவர்களுக்கு சாப்ட்வேர் கையேடுகளை வழங்கினார். கலெக்டர் குலோத்துங்கன், கல்லூரி முதல்வர் கதிர்வேல் சம்பந்தம் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அடிப்படை வசதி
கோட்டுச்சேரி கொம்யூனுக்கு உட்பட்ட குடியிருப்போருக்கான அடிப்படை தேவைகள் குறித்து, அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளில் குடியிருப்போர் நலன் கருதி, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், தெரு விளக்கு, சாலை வசதி மற்றும் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சிவனேசன் மற்றும் ஏராளமான குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்கள் பகுதி அடிப்படை தேவைகளை பதிவு செய்தனர். மக்களின் அடிப்படை தேவைகளை முடிந்தவரை விரைவாக செய்துமுடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவுறுத்தினார்.