கிருமாம்பாக்கம் ஏரியில் பற்றி எரியும் தீ


கிருமாம்பாக்கம் ஏரியில் பற்றி எரியும் தீ
x

கிருமாம்பாக்கம் ஏரியில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திரும்பி சென்றனர்.

பாகூர்

புதுவை மாநிலத்தின் 2-வது ஏரியாக பாகூர் ஏரி இருந்து வருகிறது. இந்த ஏரியின் தண்ணீர் விவசாய பயன்பாட்டுக்காகவும், பறவைகள் சரணாலயத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஏரியில் கோரைபுற்களில் தீப்பற்றியது. 2 நாட்களாக பற்றி எரிந்த தீயால் ஏரியில் இருந்த புற்கள், மரங்கள் எரிந்து தீக்கியாகின.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மாலை 6 மணி அளவில் கிருமாம்பாக்கம் ஏரியில் உள்ள முட்புதர்களில் தீப்பிடித்தது. காய்ந்த நிலையில் முட்புதர்கள் இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாகூர் தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கு அடங்காமல் பரவியதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பலத்த காற்று வீசி வருவதால் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story