9 பேர் ஊருக்குள் நுழைய தடை
கொலை வழக்குகளில் தொடர்புடைய 9 பேர் ஊருக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
அரியாங்குப்பம்
கொலை வழக்குகளில் தொடர்புடைய 9 பேர் ஊருக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்
தவளக்குப்பம் அடுத்த தமிழக பகுதியான பெரிய காட்டுபாளையம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 2013-ம் ஆண்டு காமராஜ், 2014-ம் ஆண்டு பூரணாங்குப்பம் செல்லும் மெயின் ரோட்டில் மனோகர் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் தமிழரசு (வயது 30), முகிலன் (28), செல்வம் என்ற சிலம்பு செல்வம் (33), அன்பழகன் என்ற அழகர் (42), குமாரவேல் (28), ராஜசேகர் (28), தமிழரசு (39), ராஜி (29) ஆகியோர் தொடர்புடையவர்கள்.
இதுபோல அபிஷேகபாக்கம் அடுத்த திம்மநாயக்கன்பாளையத்தில் நடந்த விவசாயி கொலை வழக்கில் சண்முகம் (22) தொடர்புடையவர் ஆவார்.
9 பேர் ஊருக்குள் நுழைய தடை
3 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் ஊருக்குள் நுழைய தடை விதிக்க தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவனுக்கு பரிந்துரை செய்தனர்.
அதை ஏற்று கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் நேற்று முதல் 2 மாதங்களுக்கு ஊருக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் திம்மநாயக்கன்பாளையம் சேர்ந்த விஜயகுமார் (19), பூரணாங்குப்பத்தை சேர்ந்த அருணாச்சலம் (24), தவளக்குப்பத்தை சேர்ந்த பவித்ரன் (23) ஆகியோர் நன்னடத்தை விதிகளை கடைபிடிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.