8 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்


8 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்
x

புதுச்சேரியில் 8 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் 8 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தாசில்தார்கள்

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 8 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். (பணியாற்றிய இடம் அடைப்புக்குறிக்குள்) அதன்படி அருண் அய்யாவு (புதுச்சேரி தாசில்தார்) புதுச்சேரி சப்-கலெக்டர் வடக்கு வருவாய் அலுவலகத்துக்கும், புவனேஸ்வரி (புதுச்சேரி கலால்துறை சப்-கலெக்டர் அலுவலகம்), வில்லியனூர் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பாகூர்

குப்பன் (சப்-கலெக்டர் கலால்துறை அலுவலகம்) புதுச்சேரி வடக்கு சப்-கலெக்டர் அலுவலகத்திற்கும், சிவராஜ் (தேசிய நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை) பள்ளிக்கல்வித்துறை குலாவ் அலுவலகத்துக்கும், சுந்தரராஜன் (பள்ளிக்கல்வித்துறை குலாவ் அலுவலகம்) கலால் துறை அலுவலகத்துக்கும், பிரித்திவி (பாகூர் தாசில்தார்) புதுவை தாசில்தார் அலுவலகத்துக்கும், கோபாலகிருஷ்ணன் (வில்லியனூர் தெற்கு சப்-கலெக்டர் அலுவலகம்) பாகூர் தாசில்தார் அலுவலகத்துக்கும், அய்யனார் (உழவர்கரை நகராட்சி) புதுவை குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை சப்-கலெக்டர் வினயராஜ் பிறப்பித்துள்ளார்.


Next Story