பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 6 சேரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்

வில்லியனூர் அடுத்த கோர்க்காடு ஏரிக்கரையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாடிக் கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த சுகுமார் (வயது 34), தேவநாதன் (40), சக்திவேல் (53), கணபதி (34), கோர்க்காடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (50), ராஜா (46) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 260 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story