அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு


அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு
x

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுவை அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்தநிலையில் புதுவை அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள அகவிலைப்படி 38 சதவீதத்துடன் 4 சதவீதத்தை உயர்த்தி 42 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரி 1-ந்தேதி முதல்...

இந்த அகவிலைப்படி உயர்வினை கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராஜமாணிக்கம் வெளியிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். அவர்களுக்கு குறைந்தது ரூ.756 முதல் ரூ.9 ஆயிரத்து 644 வரை சம்பள உயர்வு கிடைக்கும்.


Next Story