சிறுமி உள்பட 4 பேர் படுகாயம்
காரைக்காலை அடுத்த மேலக்காசாக்குடியில் நடந்த விபத்தில் சிறுமி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
கோட்டுச்சேரி
காரைக்காலை அடுத்த மேலக்காசாக்குடி அகரம்பேட்டையை சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 42). எலக்ட்ரீசியன். இவரது வீட்டுக்கு திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரியை சேர்ந்த மாமியார் தமிழ்ச்செல்வி வந்திருந்தார். உடல்நலம் சரியில்லாத அவரை ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிகிச்சைக்காக நெடுங்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். வாதிருப்பு அருகே சென்றபோது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்ததில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தமிழ்ச்செல்வி மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அந்துவான்தாஸ் (23), அவருடன் வந்த ஆனி ஜாய் (14) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்கால் வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.