செல்போன் பறித்த 3 பேர் கைது
கோட்டுச்சோியில் போலீஸ்காரரை தாக்கி செல்போன் பறித்த 3 பேரை போலீசாா் கைது செய்தனா்.
கோட்டுச்சேரி
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பூவம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது36). போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வாகன டிரைவராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று நள்ளிரவு காரைக்காலில் இருந்து கோட்டுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது மழைக்காக பிள்ளைத்தெருவாசல் சந்தைத்திடல் அருகே கொட்டகையில் ஒதுங்கி நின்றார்.
அப்போது அங்கு வந்த 4 பேர், கையில் வைத்திருந்த உடைந்த கண்ணாடி பாட்டில், கற்களால் பிரகாசை தாக்கி அவரது செல்போனை பறித்துச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அவர், காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். விசாரணையில், காரைக்கால் நகர் பகுதியை சேர்ந்த ரகுமான் (21) என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட 15 மற்றும் 16 வயதுடைய 2 சிறுவர்களும் தற்போது கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். செல்போனுக்கு ஆசைப்பட்டு இந்த வழிப்பறியில் ஈடுபட்டதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.