புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.
புதுச்சேரி
புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், புதுவை மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவரதன் ஆகியோர் புதுவை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கை சந்தித்து பேசினார்கள். அப்போது புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பும் படி வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினார். மேலும் இதுதொடர்பாக கல்வித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் பேசுவதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story