மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

காரைக்கால் கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்கால் கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மாதவன். மீன்பிடி தொழிலாளி. நேற்று மாலை இவர், காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடைபயிற்சி மேற்கொண்டார்.

ஒரு மணி நேரம் கழித்து மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து 3 பேர் சாலையில் தள்ளிக் கொண்டு செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 பேரை மடக்கி பிடித்தார். ஒருவர் தப்பியோடி விட்டார்.

2 பேர் கைது

தொடர்ந்து பிடிபட்ட 2 பேரையும் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சார்லஸ் மற்றும் போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் திருவாரூர் அண்ணாநகர் பின்னவாசலைச் சேர்ந்த சதீஷ் (வயது18), அவருடைய நண்பர் திருவாரூர் தாமரைக்குளம் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏற்கனவே திருடி வைத்திருந்த ஒரு மோட்டார் சைக்கிள் உள்பட 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story