மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது


மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது
x

திருநள்ளாறில் மின் மோட்டார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

திருநள்ளாறில் மின் மோட்டார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் தலைமையில் போலீசார் திருநள்ளாறு ரிங்க் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மறித்து சோதனை செய்தனர். அப்போது மோட்டாா் சைக்கிளில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் மின்மோட்டாரை கையில் வைத்திருந்தனர்.

அது தொடர்பாக 2 பேரிடமும் போலீசாா விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள், திருநள்ளாறு சுப்ராயபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நேதாஜி (வயது29), பவித்ரன் (28) என்பதும், திருநள்ளாறை அடுத்த கீழசுப்பிராயபுரத்தில் விவசாயி ஒருவர் வயலுக்கு நீர் பாய்ச்ச வைத்திருந்த மின் மோட்டாரை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து திருடிய மின்மோட்டாரையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story