லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
புதுவை பெரியகடை பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி
புதுவை பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் தலைமையிலான போலீசார் அரசு ஆஸ்பத்திரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், முத்தியால்பேட்டையை சேர்ந்த நடராஜன் (வயது 45), திருச்சி முசிறியை சேர்ந்த இளமுருகன் (30) என்பதும் அவர்கள் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், 4 ஆயிரத்து 930 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story