மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது


மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
x

புதுச்சேரி-தமிழக எல்லை பகுதியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

காரைக்கால்

திரு-பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் புதுச்சேரி-தமிழக எல்லை பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படியாக மூட்டை தூக்கிச்சென்ற நபரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவர் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்தபோது மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவரை பிடித்து விசாரித்தபோது, சிவகங்கை மாவட்டம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 42) என்பதும், காரைக்காலில் மதுபாட்டில்களை குறைவான விலைக்கு வாங்கி, தமிழக பகுதியில் அதிக விலைக்கு விற்பதற்காக கடத்திச் சென்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த விஸ்வநாத் (31) என்பவர் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதான 2 பேரும் கலால்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story