மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது


மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
x

குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி தமிழக பகுதியில் அதிக விலைக்கு விற்பதற்காக கடத்திய இரணடு வாலபரகளை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் மேற்கு பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக மூட்டையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை வழிமறித்து சோதனை செய்தபோது மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடித்து விசாரித்தபோது, வேளாங்கண்ணியை சேர்ந்த காளிமுத்து (வயது 31), காரைக்கால் நெடுங்காட்டை சேர்ந்த ஹரிகணேஷ் (33) என்பது தெரியவந்தது. காரைக்கால் பகுதியில் குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி தமிழக பகுதியில் அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தியது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.


Next Story