கஞ்சா விற்ற 2 பேர் கைது
பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி கொம்பாக்கம்-வில்லியனூர் ரோட்டில் முதலியர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அரசு பள்ளி அருகில் நின்று கொண்டு இருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார் அவர்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் முதலியார்பேட்டை நைனார்மண்டபத்தை சேர்ந்த பிரசாத் (வயது 25), தமிழரசன் (26) என்பதும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 135 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story