ரூ.150 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள்


ரூ.150 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள்
x

புதுவை சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.150 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை தொடங்க ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.

புதுச்சேரி

மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் புதுவை மாநிலத்தில் உள்ள பல்வேறு கோவில்கள், சுற்றுலா தலங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. தற்போது சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள புதுவை, காரைக்கால் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு ரூ.150 கோடியில் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்களை மேற்கொள்வதற்கு தேவையான மூலத்திட்டம் மற்றும் விரிவாக திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, தனியார் நிறுவனத்தின் தலைவர் ரத்தீஷ் ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். அப்போது தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story