செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம்
காரைக்காலில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் எச்சரித்துள்ளார்.
காரைக்கால்
காரைக்காலில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் எச்சரித்துள்ளார்.காரைக்காலில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் எச்சரித்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விபத்து அதிகரிப்பு
காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில், மோட்டார் சைக்கிள் ஓட்டுவோர் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும். கார் ஓட்டுவோர் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் சிலர் மோட்டார் சைக்கிள், வாகனங்களில் செல்போன் பேசிக்கொண்டே செல்கின்றனர். இதனால் விபத்துகள் அதிகரிக்கிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
புகைப்படம் அனுப்பலாம்
இதனை தடுக்கும் பொருட்டு காரைக்கால் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் ஓட்டும்போது, செல்போனில் பேசிக்கொண்டு செல்பவர்களை பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்து போக்குவரத்து காவல்துறை வாட்ஸ் அப் (9489205307) எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.
சம்பந்தப்பட்டவரின் ரகசியம் காக்கப்படுவதுடன், செல்போன் பேசிக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்தை கொண்டு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.