நர்சிங் படிப்பில் சேர 100 மதிப்பெண்ணுக்கு நுழைவுத்தேர்வு


நர்சிங் படிப்பில் சேர 100 மதிப்பெண்ணுக்கு நுழைவுத்தேர்வு
x

புதுவையில் நர்சிங் கல்லூரிகளில் சேர 100 மதிப்பெண்ணுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

புதுச்சேரி

புதுவையில் நர்சிங் கல்லூரிகளில் சேர 100 மதிப்பெண்ணுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

பொது நுழைவுத்தேர்வு

புதுவையில் கடந்த காலங்களில் நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. படிப்புக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்தது. ஆனால் இந்த ஆண்டு நர்சிங் கவுன்சிலின் புதிய விதிமுறைகளின்படி பொது நுழைவுத்தேர்வு (நீட் தேர்வு போன்று) நடத்தி மாணவர்களை சேர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனை ஏற்க பல்வேறு மாநிலங்கள் மறுத்து வருகின்றன. புதுவையிலும் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது பொது நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

5 பாடங்கள்

புதுவையில் உள்ள அனைத்து அரசு, தனியார், நிகர்நிலை நர்சிங் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு பொது நுழைவுத்தேர்வை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பொது நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளின் (இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம்) மற்றும் நர்சிங் படிப்பிற்கான தகுதி கண்டறிதல் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும். 5 பாடங்களுக்கும் தலா 20 மதிப்பெண்கள் (100 மதிப்பெண்கள்) வழங்கப்படும்.

தேர்வு தேதி, முடிவுகள் தொடர்பான பிற விவரங்கள் சுகாதாரத்துறை இணையதளத்தில் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story