பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
x

புதுச்சோியில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசாா் கைது செய்தனா்.

புதுச்சேரி

புதுவை வைத்திக்குப்பம் சுனாமி குடியிருப்பில் சூதாட்டம் நடப்பதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாடிக் கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கோவிந்தபாலன் (38), வைத்திக்குப்பத்தை சேர்ந்த மகேஷ் (61), சதீஷ் (24), வல்லத்தான் (31), ஆனந்த் (35), பச்சைவாழியம்மன்கோவில் தெருவை சேர்ந்த வல்லத்தான் (32), குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா (40), சோலைநகரை சேர்ந்த செல்லப்பன் (46), முத்தியால்பேட்டையை சேர்ந்த செழியன் (30), நடுக்குப்பத்தை சேர்ந்த சங்கர் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.34 ஆயிரத்து 180, 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story