டிஜிட்டல் முறைக்கு மாறும் அரசு மருத்துவமனைகள்


டிஜிட்டல் முறைக்கு மாறும் அரசு மருத்துவமனைகள்
x

புதுச்சேரி அரசு மருத்துவமனைகள் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகிறது. நோயாளிகளின் மருத்துவ பதிவேடுகளை பராமரிக்கும் திட்டம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு மருத்துவமனைகள் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகிறது. நோயாளிகளின் மருத்துவ பதிவேடுகளை பராமரிக்கும் திட்டம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் திட்டம்

புதுவை அரசு சுகாதாரத்துறை நடவடிக்கையின் பேரில் அரசு பொது மருத்துவமனைகளில் முதல் முறையாக டிஜிட்டல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்குள்ள மருத்துவமனையில் எளிதில் சிகிச்சை பெறும் வகையில் நோயாளிகள் சிகிச்சை விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுவை அரசு பொது மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகள் ஒரு முறை மட்டும் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்தால் போதும் அவர்களுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும். இந்த எண்ணின் அடிப்படையில் நோயாளிகள் குறித்த விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவ பரிசோதனை விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்

இவ்வாறு பதிவு செய்ய நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும் போது கை நிறைய அட்டைகளை கொண்டு வர வேண்டிய அவசியம் இருக்காது. டிஜிட்டல் பதிவு எண்ணை மட்டும் கூறினால் போதும் அனைத்து விவரங்களையும் டாக்டர்கள் கம்ப்யூட்டரில் பார்த்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.

இதன் மூலம் ஏற்கனவே செய்த பரிசோதனைகளை தேவையின்றி மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. விரைவில் ஆரம்ப சுகாதார நிலையங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளது.


Next Story