விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
புதுச்சோியில் அா்ஜூன் சம்பத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சினா் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாகூர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து அர்ஜூன் சம்பத் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பாகூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொகுதி பொறுப்பாளர் காளியப்பன் தலைமையில் கிருமாம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் திடீரென புதுச்சேரி-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது அவர்கள் அர்ஜூன் சம்பத்தின் உருவப்படத்தை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story