சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: வாலிபர் கைது


சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Feb 2025 5:00 AM IST (Updated: 9 Feb 2025 5:56 AM IST)
t-max-icont-min-icon

பாதிக்கப்பட்ட சிறுமி, சம்பவம் குறித்து தனது பெற்றோரி்டம் தெரிவித்தாள்.

தானே,

மராட்டிய மாநிலம் தானே நகரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, சம்பவத்தன்று தனது பெற்றோருடன் சண்டை போட்டு உள்ளார். இதனால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள மாசுந்தா குளம் பகுதியில் அமர்ந்திருந்தார்.

தனியாக இருந்த சிறுமியை கவனித்த அங்கு நடமாடிய 19 வயது வாலிபர் நைசாக பேச்சு கொடுத்தார். இதில் வீட்டை விட்டு வெளியேறியது அவருக்கு தெரியவந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வாலிபர் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி மறைவிடத்திற்கு கடத்தி சென்று, சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு சென்று சம்பவம் குறித்து பெற்றோரி்டம் தெரிவித்தாள். இது பற்றி அவர்கள் போலீசி்ல் புகார் அளித்தனர். புகாரின் படி போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story