கள்ளக்காதலை கைவிடாததால் பெண் கொலை - அக்காள் மகன் வெறிச்செயல்
ஷோபா மாந்திரீகத்தில் அதிகளவு நம்பிக்கை கொண்டவர் என்று கூறப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷோபா. இவரது அக்காள் மகன் பீமப்பா. ஷோபா மாந்திரீகத்தில் அதிகளவு நம்பிக்கை கொண்டவர் என்று கூறப்படுகிறது. மேலும் வாலிபர் ஒருவருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இதை பீமப்பா பார்த்து ஷோபாவை கண்டித்தார். ஆனால் ஷோபா கேட்கவில்லை. இதனால் அடிக்கடி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் சம்பவத்தன்று ஷோபா வீட்டில் தனியாக இருந்தபோது, பீமப்பா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் கோபம் அடைந்த பீமப்பா செங்கலால் ஷோபாவின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ஷோபா உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஜமகண்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் ஷோபாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
விசாரணையில் ஷோபாவின் கள்ளக்காதலுக்கு பீமப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் பீமப்பாவை பழிவாங்க ஷோபா மாந்திரீகம் செய்து அவரது வீட்டின் முன்பு வைத்தார். மேலும் பீமப்பா எங்கும் வேலை பார்க்க முடியாதபடி அவதூறு பரப்பி வந்தார். இதனால் கோபம் அடைந்த பீமப்பா, ஷோபாவை கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக பீமப்பாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.