காங்கிரஸ், திமுகவுக்கு தண்ணீர் காட்ட வேண்டும் பாஜகவுக்கு அல்ல - விஜய்க்கு அண்ணாமலை பதிலடி


காங்கிரஸ், திமுகவுக்கு தண்ணீர் காட்ட வேண்டும் பாஜகவுக்கு அல்ல - விஜய்க்கு அண்ணாமலை பதிலடி
x
தினத்தந்தி 28 March 2025 11:52 AM (Updated: 28 March 2025 11:52 AM)
t-max-icont-min-icon

பாஜக யாருடன் கூட்டணி என்பது குறித்து பேச வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய மீன்வளத்துறை மந்திரி ராஜீவ் ரஞ்சன் சிங்கை சந்தித்த பின்னர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினேன்.மாநில தலைவராக எனது கருத்தை கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளேன். பாஜக தேசிய தலைவர் தேர்தல், மாநில தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.கட்சி நலனைவிட தமிழக நலனே முக்கியம். தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில் தற்போதே கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை.2026-ம் ஆண்டு தேர்தலை பொருத்தவரை திமுகவே பாஜகவின் எதிரி. அதனை ஆட்சியில் இருந்து அகற்றுவதே நோக்கம். 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தல் தமிழக மக்களின் நலனுக்காக தேர்தல்.திமுகவின் தவறை சுட்டுக்காட்டுவதில் பாஜகவே முதன்மையாக உள்ளது.

கட்சி தொடங்கி எத்தனைமுறை வெளியே வந்தார் விஜய்? மைக்கில் பேசுவது மட்டும் அரசியல் இல்லை, களத்தில் நின்று வேலை பார்ப்பதே அரசியல். தினமும் போராடுவது ஒரு அரசியல், கட்சி தொடங்கி 3 முறை வெளியே வருவது ஒரு அரசியல். மீடியா வெளிச்சத்திற்காக பிரதமர் குறித்து பேசுகிறார் விஜய். காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும் பாஜகவுக்கு அல்ல. யாருக்கு யார் எதிரி என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என்றார்.


Next Story