'சிறை கைதிகள் ஊதிய பிடித்தம் முறையாக பயன்படுத்தப்பட்டதா?' - ஐகோர்ட்டு கேள்வி

சிறை கைதிகளின் ஊதிய பிடித்தம் முறையாக பயன்படுத்தப்பட்டதா? என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
கடலூரை சேர்ந்த தீபா லட்சுமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வேலூர் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவருக்கு முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு தொர்பான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, சிறை கைதிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு நிதி முறையாக பயன்படுத்தபட்டதா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது தொடர்பான தணிக்கை அறிக்கையை வரும் 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக தலைமை கணக்கு தணிக்கையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story