உத்தர பிரதேசம்: தண்ணீர் பம்ப் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக்கொலை

உத்தர பிரதேசத்தில் தண்ணீருக்காக ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தை சேர்ந்தவார் ரமேஷ். இவர் தனது வீட்டின் அருகிலுள்ள அரசுக்கு சொந்தமாக கை பம்ப்பில் மோட்டாரை பொருத்தினார்.
இதனால் அனில் என்ற மற்றொரு கிராமவாசி அதிலிருந்து தண்ணீர் எடுக்க கேட்டபோது வாக்குவாதம் எழுந்தது. இதில் அனிலின் கூட்டாளி சைபி (35) என்பவரும் உடன் இருந்தார்.
இந்த வாக்குவாதல் தீவிரமடைந்த நிலையில் நமேஷும் அவரது கூட்டாளிகளும் சைபியை கட்டைகள், இரும்பு கம்பிகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே வலிதாங்க முடியாமல் சைபி சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு இறந்து கிடந்த சைபியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் ரமேஷை போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீருக்காக ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.