இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025
x
தினத்தந்தி 7 Feb 2025 3:36 AM (Updated: 7 Feb 2025 2:53 PM)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 7 Feb 2025 6:09 AM

    வட்டி குறைப்பு சமாமானிய மக்களுக்கு பலன் அளிக்கும்

    ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பு குறித்து இன்போமெரிக்ஸ் ரேட்டிங்கின் தலைமை பொருளாதார நிபுணர் மனேரஞ்சன் சர்மா கூறியதாவது:-

    வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டிருப்பது கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க வழிவகுக்கும். அத்துடன் இது சாமானிய மக்களுக்கு பலன் அளிக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளிக்கும். தற்போதைய பெரிய பொருளாதார அமைப்பு மற்றும் உலகளாவிய சூழலில், வட்டி குறைப்பு நடவடிக்கை சரியான கொள்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

  • 7 Feb 2025 5:53 AM

    உத்தர பிரதேசம்: மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார் 18-ல் தீ விபத்து நேரிட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

  • 7 Feb 2025 5:24 AM

    ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிவிப்பு: காங்கிரஸ் எம்.பி. விமர்சனம்

    இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார்.

    கொரோனா தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மந்தநிலையை போக்கும் வகையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி குறைப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    வட்டி குறைப்பு அறிவிப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறுகையில், மத்திய அரசு திக்கற்று நிற்பது அனைவருக்கும் தெரியும் என்றும், தேர்தலுக்காக மட்டுமே இப்போது விழித்துக்கொண்டு ஏதாவது செய்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.

    தலைப்புச் செய்தியில் இடம்பெறுவதை மட்டுமே அரசாங்கம் விரும்புகிறது, உண்மையான பிரச்சினைகளை தீர்க்க விரும்பவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

  • 7 Feb 2025 5:23 AM

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க,   உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • 7 Feb 2025 5:16 AM

    தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீரை வறண்ட இடங்களான திசையன்விளை, சாத்தான்குளம் பகுதிக்கு கொண்டு செல்லும் திட்டம், 2 ஆண்டுகளாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்க புதிய புறவழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • 7 Feb 2025 4:54 AM

    ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு

    இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்க ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

  • 7 Feb 2025 4:17 AM

    சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவால் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது

  • 7 Feb 2025 3:40 AM

    ரூ1.86 லட்சம் கோடி வருமான வரி செலுத்திய "ரிலையன்ஸ்"

    நாட்டிலேயே அதிகபட்சமாக ஒரு கோடியே 86 லட்சத்தை வருமான வரியாக செலுத்தியது ரிலையன்ஸ் நிறுவனம்

    ஒட்டுமொத்த பட்ஜெட்டில் நான்கு சதவீத தொகையை வருமான வரியாக செலுத்தியதாக தகவல்


Next Story