திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த விவகாரம்: காவல் அதிகாரிகள், தேவஸ்தான அதிகாரிகள் சஸ்பெண்ட்


திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த விவகாரம்: காவல் அதிகாரிகள், தேவஸ்தான அதிகாரிகள் சஸ்பெண்ட்
x

உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இலவச தரிசன டிக்கெட்டை பெற நேற்றிரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர்.

அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டிஎஸ்பி உட்பட காவல் அதிகாரிகள் 2 பேர் மற்றும் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி, தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்தசம்பவம் குறித்து பணியில் இருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்படும் என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


Next Story