சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த கவர்னர்


சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த கவர்னர்
x
தினத்தந்தி 11 Jun 2024 9:22 PM IST (Updated: 12 Jun 2024 10:53 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேச முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்க உள்ளார்.

அமராவதி,

சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களைக் கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் இன்று நடைபெற்றது.

இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யான் கவர்னர் மாளிகை விரைந்தனர். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கவர்னர் அப்துல் நசீரிடம் வழங்கிய சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி அமைக்க வரும்படி சந்திரபாபு நாயுடுவுக்கு கவர்னர் அப்துல் நசீர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சந்திரபாபு நாயுடு நாளை ஆந்திர பிரதேச முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார்.


Next Story