காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி குழு கூட்டம் நாளை கூடுகிறது


காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி குழு கூட்டம் நாளை கூடுகிறது
x
தினத்தந்தி 21 July 2024 4:29 AM GMT (Updated: 21 July 2024 4:53 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில், டெல்லியில் நாளை கூடுகிறது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடைபெறும். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில், டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் நாளை கூடுகிறது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில், இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுகிறது. இந்த சூழலில், புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தின் முக்கிய கமிட்டி அறையில் இன்று காலை 11 மணியளவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும். இதில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மக்களவை துணை தலைவர் கவுரவ் கோகாய், மாநிலங்களவை துணை தலைவர் பிரமோத் திவாரி ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.


Next Story