தெலுங்கானா: மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து


தெலுங்கானா: மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 7 Dec 2024 2:52 AM IST (Updated: 7 Dec 2024 2:53 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாலக்பேட் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

ஹைதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாலக்பேட் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. நேற்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மலாக்பேட்டை தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில்;

தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியது. தீ விபத்தில் பல இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணத்தை அறிய தீயணைப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.


Next Story