நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா..? - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா..? - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 8 July 2024 12:58 AM GMT (Updated: 8 July 2024 1:05 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகின்றன.

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.


Next Story